ஸ்மார்ட் அட்டை - NOL Card


ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் நுட்ப பயன்பாட்டில் முன்னோடியாக திகழும் துபாயில் அங்குள்ள போக்குவரத்து வசதிகளை எளிதாக பயன்படுத்த அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த ஸ்மார்ட் அட்டை 'NOL Card'.

இந்த அட்டையை பயன்படுத்தி துபாயில் இயங்கி வரும் பஸ்கள், மெட்ரோ ரயில்கள், துபாய் ட்ராம், படகு சவாரிகள் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவை செலுத்த முடியும். இந்த அட்டை அங்குள்ள போக்குவரத்து துறையினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையில் மூன்று வகை உள்ளன. Silver, Gold மற்றும் Blue அட்டை. இந்த அட்டையை யார் வேண்டுமானாலும் வாங்க கொள்ளலாம். Silver மற்றும் Gold அட்டை 20 திர்ஹமுக்கும் Blue அட்டை 70 திர்ஹமுக்கும் கிடைக்கும். இந்த அட்டை ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். அதன் இருப்பு குறையும் பொழுது அதனை எளிதாக நிரப்பி கொள்ளலாம்.

இந்த அட்டையில் மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகளும் உள்ளன. இந்த அட்டையை மேலும் இதர சேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த அட்டை குறித்த முழு தகவல்கள் பெற NOL Card இணைய தளத்தில் பார்க்கவும்.

Previous
Next Post »