எடுத்து செல்ல தடை செய்யப்பட்ட மருந்துகள்


இன்றைய கால கட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் ஏதேனும் சில மருந்து மாத்திரைகளை தங்களது கைப்பையில் எடுத்து செல்வது வழக்கம். குறிப்பாக மன உளைச்சல், வேலை பழு போன்றவற்றால் ஏற்படும் தலைவலி, இருமல் போன்ற சாதாரண தொந்தரவுகளை உடன் விரட்ட அதற்கான மருந்துகள் பல பேரிடம் எப்பொழுதும் இருக்கும். ஆனால் அத்தகைய மருந்துகளில் சில வளைகுடா நாடுகளில் எடுத்து செல்ல தடை இருப்பதால் அதனால் சிறை தண்டனை வரை சந்திக்க வேண்டி வரும்.

சட்ட விரோதமாக போதை மருந்துகள் எடுத்து செல்லும் நடவடிக்கையை தடுப்பதற்கான சட்டமே நம்மை இந்த பிரச்சனையில் சிக்க வைக்கின்றது. சில மருந்து மாத்திரைகளில் தடை செய்யப்பட்ட மூலப் பொருட்கள் இருப்பதால் அந்த மருந்து மாத்திரைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட மருந்து மாத்திரைகள் வளைகுடா நாடுகளுக்கு எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

சில ஜலதோஷம் மற்றும் இருமல் மாத்திரைகள்.
சில தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் 
ஹார்மோன் மாற்று சிகிச்சை மருந்துகள் 
பாலியல் தூண்டும் மருந்துகள் 
கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் [Alfentanil, Amphetamine, Codeine, Fentanyl, Ketamine, Methadone, Methyphenidate, Morphine]

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை எடுத்து செல்லக் கூடாது.[ Sosegon, Subutex Ultiva, Abilify, Anexate, Arthrotec, Ativan, Barnetil, Buccastem, Clopixol, Cytotec, 123 Cold, Actifed Compound, Actifed DM, Activelle, Adol Cold, Adol Compound, Adumbran, Akineton, Algaphan, Anafranil, Andriol, Artane etc].

முழுமையான பட்டியலை இங்கு காணவும் தடை செய்யப்பட்ட மருந்துகள்
Previous
Next Post »