வளைகுடா நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் அமைப்பு அங்கு வேலை செய்ய வரும் தொழிலாளர்களின் மருத்துவ சோதனைகளை செய்வதற்கும் அவர்களின் உடல் தகுதிகளை கண்டறியவும் நிர்வாக குழு அமைத்து கண்காணித்து வருகிறது. அதன் மூலம் தொழிலாளர்களின் நாடுகளில் இக்குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்ட சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன.
புதிதாக வளைகுடா நாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள் இம்மையங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இம்மையங்கள் அச்சுகாதர மையங்களின் சங்கம் GAMCA [Gulf Approved Medical Center Association] மூலம் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உடல் தகுதிகளை ஒப்புதல் செய்வதற்கு கீழ்க்கண்ட சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏதேனும் குறிப்பிடத்தக்க நோய் கடந்த காலத்தில் இருந்ததா என்பதை கண்டறிதல், மருத்துவ மற்றும் ஆய்வக பரிசோதனை செய்தல்.
பின்வரும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்ல தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.
தொற்று நோய்கள்
எய்ட்ஸ், HIV AIDS Reactive.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள், Hepatitis (B) Surface Antigen Positive and Anti HCV.
மலேரியா, Microfilaria Positive & Malaria Blood Film Positive.
தொழு நோய், Known Leprosy Patient.
காச நோய், Tuberculosis any type.
Pulmonary by chest X ray showing active or past evidence of old T.B. Including minimum Fibrosis, calcification and Pleural thickening.
Tuberculous Pleural Effusion.
Tuberculous Lymphadenitis.
நகங்கள் சம்பந்தமான நோய்கள், Venereal Diseases, VDRL Positive and TPHA Positive.
தொற்று அல்லாத நோய்கள்
நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு, Chronic Renal Failure
நாள்பட்ட கல்லீரல் நோய், Chronic Hepatic Failure
இதய நோய், Congestive Heart Failure
கட்டுப்படுத்தப்படாத உயர் அழுத்தம், Uncontrolled Hypertension
நீரிழிவு நோய், Uncontrolled Diabetes Mellitus
புற்றுநோய், Known case of cancer
மனநோய், Psychiatric Diseases and Neurological Disorders
நிறக்குருடு, செவிடு, Physical Disability eg. colour blindness for drivers, deafness etc
பெரிய அறுவை சிகிச்சை, Any major operation
குறைந்த ஹீமோகுளோபின், Hemoglobin below 10 mg/dl
சென்னையில் உள்ள GAMCA அலுவலகம்
GAMCA
B-2, 1 Floor, Gee Gee Cresent, Opp., Abu Palace Hotel,.
Above Mcdonalld, 114, Poonamalli High Road, Chennai 600 084.
Sign up here with your email
