கத்தாரில் உள்ள தலைமை சுகாதரம மையம் மருத்துவ விடுப்பு மற்றும் அதற்கான சான்றிதழ் பெறுவதற்கான இணையதள சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இச்சேவை மூலம் இதில் நடக்கக்கூடிய மோசடிகளையும் நோய்கள் குறித்த கண்காணிப்பும் செய்ய இயலும் என அம்மையம் தெரிவித்து உள்ளது.
E-Jaza என்று அழைக்கப்படும் இத்திட்டம் தனியார் துறைகளில் பணி புரியும் மருத்துவர்கள் நடைமுறையில் உள்ள காகித முறையுடன் சேர்த்து அமுல்படுத்த வேண்டும். வருகின்ற டிசம்பர் 30 முதல் இது கட்டாயமாக்க பட உள்ளது.
மேலும் இதன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் மட்டுமே சில நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் மருத்துவ விடுப்பிற்கு அனுமதி வழங்கும்.தற்பொழுது இத்திட்டம் அரசு துறைகளில் அமுல்படுத்தப்படவில்லை.
கத்தார் தொழிலாளர்கள் சட்டத்தின் படி, மூன்று மாதங்களுக்கு வேலையில் பணி செய்யும் தொழிலாளி மருத்துவ விடுப்பு எடுக்க இயலும். முதல் இரு வாரங்களுக்கு முழு சம்பளத்துடனும் மேலும் நான்கு வாரங்களுக்கு பாதி சம்பளத்துடனும் விடுப்பு பெற இயலும். 12 வாரங்களுக்கு பிறகு ஒரு தொழிலாளி பணிக்கு வரவில்லை என்றால் அவரை பணி நீக்கம் செய்யலாம்.
Sign up here with your email
