கடந்த செப்டம்பர் மாதம் இந்திய பிரதமர் மோடியினால் துவக்கி வைக்கப்பட்ட 'இந்திய தயாரிப்பு' [Made in India] பிரசாரத்தின் ஓர் அங்கமாக சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர் சவூதி நாட்டை சார்ந்த தொழில் அதிபர்களை இந்திய நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
சவூதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோர் சந்திப்பில் இந்திய நாட்டில் முக்கிய துறைகளான மோட்டார் வாகனங்கள், விமான போக்குவரத்து, மின்னணு அமைப்புகள், உணவு பதப்படுத்துதல், எண்ணெய் மற்றும் எரிவாயு, உயிரி தொழில்நுட்பம், பாதுகாப்பு உற்பத்தி, மின் இயந்திரங்கள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், மருந்துகள், துறைமுகங்கள், ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், விண்வெளி, ஜவுளி வஸ்திரங்கள், வெப்ப சக்தி, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகிய துறைகளிலும் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியாவின் 4 வது மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சவுதி அரேபியா உள்ளது. மேலும் இது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் பெரிய வழங்குநராக இருக்கிறது.
சவூதி அரேபியா தொழில் அதிபர்களும் தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.
Sign up here with your email
