உலக கிராம திருவிழா

வளைகுடா நாடுகளிலேயே பெரிய அளவில் நடத்தப்படும் பருவ கால கலாச்சார திருவிழாவான Global Village எனப்படும் உலக கிராம திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கடந்த நவம்பர் 6 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இத்திருவிழா வருகின்ற 11 ஏப்ரல் 2015 முடிய நடைபெறும். இங்கு வரும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பல்வேறு வண்ணமிகு கலாச்சார நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் சிறப்புமிக்க பொருட்களின் விற்பனை அங்காடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் சுவைமிகு உணவுகளை சுவைப்பதற்கும் உண்டு மகிழவும் பலதரப்பட்ட உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 70 நாடுகள் இதில் கலந்து கொண்டுள்ளன.

இத்திருவிழா தினமும் மாலை 4 மணி முதல் இரவு 12 மணி  வரை நடைபெறும். விடுமுறை நாட்களில்  மாலை 4 மணி முதல் இரவு 1 மணி  வரை நடைபெறும். திங்கள் கிழமை மட்டும் குடும்பமாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனுமதி நுழைவு சீட்டு 15 திர்ஹம் ஆகும். 3 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 


Previous
Next Post »