இந்தியாவில் இருந்து வேலைக்கு வந்த இடத்தில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு முதல் முறையாக சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கலாச்சார மற்றும் அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய தூதுவர் Pravasi Sevana Kendra என்றழைக்கப்படும் குறை தீர்க்கும் மையத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம் சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் சந்திக்கக் கூடிய தொழிலாளர் மற்றும் சுகாதாரம் குறித்த பிரச்சனைகளுக்கு அந்த துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு ஆலோசனை வழங்கப்படும்.
இந்த மையம் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் இரவு 8.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஷரபியா [Sharafia] பகுதியில் உள்ள இம்பாலா கார்டனில் [Impala Garden] இயங்கும்.
Sign up here with your email
