ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து சட்டத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்புதிய விதிமுறைகளின் படி, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு குவைத்தில் வாழும் வெளிநாட்டினர் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் அவரது சம்பளம் 600 குவைத் தினாருக்கு குறைவாக இருக்கக் கூடாது. இவ்விதிமுறை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விதிமுறை சில நபர்களுக்கு பொருந்தாது.
குவைத்தி அல்லாத நபர் குவைத்தியை மணமுடித்து இருந்தால்.
குவைத் பல்கலைகழகத்தில் படித்து வரும் மாணவர்கள்
வெளிநாட்டினரின் மனைவி. [கணவனுக்கு ஓட்டுனர் உரிமை பெற தகுதி இருக்க வேண்டும்]
அரசு துறை சார்ந்தவர்கள்
நிறுவன பொறுப்பில் இருக்கும் ஓட்டுனர்கள்
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நபரிடம் ஓட்டுனர் வேலை செய்யும் நபர்.
செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை வல்லுனர்கள்
விமானிகள் மற்றும் துணை விமானிகள்
நீதிபதிகள்
ஆசிரியர்கள்
பத்திரிக்கையாளர்கள்
விளையாட்டு வீரர்கள்
கணக்காளர்கள்
ஒருவர் வேலை மாறும் பொழுது அவரது புதிய வேலைக்கு ஓட்டுனர் உரிமம் பெறும் தகுதி இல்லையென்றால் அவரிடம் இருக்கும் பழைய ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.
Sign up here with your email
