ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலமாக வேலைக்கு வரும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு தொழிலாளர் அமைச்சகம் புதிய அறிவிப்பை செய்துள்ளது. இதன் படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் நிறுவன விசாவில் அல்லாமல் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் பெயரில் வரும் பட்சத்தில் அவர்களுக்கு முழு பொறுப்பாக அவர்களை அழைத்து வரும் ஆட்சேர்ப்பு நிறுவனமே ஏற்று கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இவ்வாறு வரும் தொழிலாளர்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அவர்களுக்கு யார் முழு பொறுப்பு என்ற தெளிவு இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். எனவே தற்பொழுது அவர்களை முழுமையாக கவனிக்கும் பொறுப்பு அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஆட்சேர்ப்பு நிறுவனத்தையே சேரும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறுவதற்கும், ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தகவல்களை தெரிவிப்பதற்கும் ஓர் புதிய இணைய தளம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up here with your email
