சமையல் எரிவாயு மானியம் பெறும் வழிமுறை


இந்திய அரசு வருகின்ற 2015 ம் ஆண்டு முதல் சமையல் எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. எனவே சமையல் எரிவாயு உபயோகிக்கும் வாடிக்கையாளர்களை இத்திட்டத்தின் விதிமுறைகளை உடன் பூர்த்தி செய்ய கேட்டு கொண்டுள்ளது. 

வெளிநாட்டில் வேலை செய்து வரும் நம்மவர்களுக்கு பயன்படும் படி இங்கே அதன் விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

நேரடி மானியம் பெறுவதற்கு பயன்பாட்டாளர் தனது பெயரில் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.
சந்தை விலையில் முதலில் சமையல் எரிவாயு பெறுவதற்கு முன் பயன்பாட்டாளர் ஒரு முறைக்கான நிரந்தர முன்பணம் அவரது வங்கி கணக்கில் பெறுவார்.
பயன்பாட்டாளர் உரிமை படி அவரது வங்கி கணக்கில் சமையல் எரிவாயுக்கான மானியம் செலுத்தப்படும்.
வருகின்ற 14 பெப்ரவரி 2015 முடிய மானிய விலையிலேயே சமையல் எரிவாயு வழங்கப்படும்.
அதனை தொடர்ந்த 3 மாதங்களுக்கு சந்தை விலையில் வழங்கப்படும். அவ்வாறு வழங்கும் எரிவாயுக்கான மானிய தொகை இத்திட்டத்தில் செர்ந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
15 மே 2015 முதல் சந்தை விலையிலேயே சமையல் எரிவாயு கிடைக்கும்.
இத்திட்டத்தில் சேர இரு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

வழிமுறை 1
பயன்பாட்டாளர் ஆதார் எண்ணை தங்களது வங்கி கணக்கில் இணைத்து விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
தங்களது ஆதார் எண்ணை சமையல் எரிவாயு நுகர்வோர் எண்ணுடன் இணைத்து விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இதனை நேரடியாக அல்லது கால் சென்டர் மூலமாக அல்லது இணையம் மூலமாக அல்லது அஞ்சல் மூலமாக அல்லது SMS மூலமாக பூர்த்தி செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். வழிமுறை 1 

வழிமுறை 2
பயன்பாட்டாளர் வங்கி கணக்கு எண்ணை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
அல்லது 
சமையல் எரிவாயு நுகர்வோர் எண்ணை விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தங்களது வங்கி கிளைகளில் கொடுக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். வழிமுறை 2 

எளிய முறையில் இவ்விதிமுறைகளை இணையத்தில் பூர்த்தி செய்ய இங்கே பார்க்கவும். எனது சமையல் எரிவாயு

தங்களது வங்கி இச்சேவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அறிய இங்கே பார்க்கவும். மானியம் அனுமதிக்கும் வங்கிகள்.
Previous
Next Post »