வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் நலனுக்காகவும் அவர்களின் பாதுகாப்பிற்கும் இந்திய அரசு புதிய கொள்கையை அறிவித்து உள்ளது.
இக்கொள்கையின் படி கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் வயது 30 க்கு மேல் இருக்க வேண்டும்.
வேலை கொடுப்பவருக்கும் வேலைக்கு செல்வோருக்கும் இடையே மட்டுமே ஒப்பந்தம் இருக்க வேண்டும்.மேலும் இவ்வொப்பந்தம் இந்திய தூதரகத்தால் சான்றொப்பம் வழங்கப்பட வேண்டும்.
வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கும் ஒவ்வொருவரும் இந்திய தூதரகத்தில் $2500 க்கு வங்கி உத்திரவாதம் வழங்க வேண்டும்.
வீடு வேலைக்கு செல்வோருக்கு ஒரு கைப்பேசி இணைப்பு வாங்கி கொடுக்க வேண்டும்.
70 குவைத் தினாருக்கு குறையாமல் சம்பளம் கொடுக்க வேண்டும்.
இந்த வங்கி உத்தரவாத கொள்கை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் கத்தார் நாடுகளில் ஏற்கனவே அமுல்படுத்த பட்டுள்ளது.
Sign up here with your email
