துபாய் அரசாங்க நிறுவனமான துபாய் விமான போக்குவரத்து நிறுவனம் 'Fly Dubai' என்ற பெயரில் இயக்கி வரும் விமான சேவை சென்னை விமான நிலையத்திலிருந்தும் விரைவில் தொடங்க உள்ளது.
Fly Dubai ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஏழு நகரங்களுக்கு தனது சேவையை இயக்கி வருகிறது. சென்னை நகரம் அதன் 8 வது சேவை பெறும் நகரமாக இணைய உள்ளது. வருகின்ற 31 மார்ச் 2015 முதல் சென்னை விமான நிலையத்திலிருந்து இயங்க தொடங்கும்.
Fly Dubai வாரத்திற்கு மூன்று விமானங்களை இத்தடத்தில் இயக்கும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
Sign up here with your email
