துபாய் அதிசய மலர் தோட்டம்


சாதரணமாக தோட்டங்களில் பூஞ்செடிகளை கண்டிருப்போம். ஆனால் இங்கு வண்ண மலர்களை மட்டுமே வைத்து ஒரு பிரமான்டமான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதிசய தோட்டம் [Miracle Garden] என்றழைக்கப்படும் இந்த தோட்டம் துபாய் லேன்ட் [Dubai Land] பகுதியில் அரேபியன் ரேஞ்சஸ் [Arabian Ranches] அருகாமையில் அமைந்துள்ளது. 

இத்தோட்டத்தின் இரண்டாவது கட்ட பணி இன்னும் நடந்து வருகிறது. எனினும் அதன் முதல் கட்டம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

45 வண்ணங்களுக்கு மேலாக சுமார் 4.5 கோடி மலரும் பூக்களை கொண்டு அழகிய கட்டட அமைப்புகள், அற்புதமான வடிவங்கள், வளைவுகள், சுவர்கள் மற்றும் வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்கள் இளைப்பாற மலர்களால் அமைந்த கூடாரங்களும் உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

இரண்டாவது கட்டத்தில் சுமார் 10000 க்கு மேற்பட்ட வண்ணத்து பூச்சிகளை கொண்டு வண்ணத்து பூச்சி தோட்டம் [Butterfly Garden] அமைய உள்ளது. 

இத்தோட்டம் வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொது மக்களுக்கு திறந்து இருக்கும். ஆடவர்களுக்கு 30 திர்ஹம் அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

Previous
Next Post »