அபுதாபியில் தண்ணீர் வரி அதிகரிப்பு


வருகின்ற 1 ஜனவரி 2015 முதல் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணம் அபுதாபியில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன் படி, பச்சை மற்றும் சிகப்பு என இரு பிரிவுகள் அறிமுகம் செய்ய உள்ளனர். இதில் பச்சை பிரிவில் உள்ளோர் சிக்கன பயன்பாட்டாளராகவும் சிகப்பு பிரிவில் உள்ளோர் அதிக பயன்பாட்டாளராகவும் கருதப்படுவர்.

அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் வெளிநாட்டினர் தினமும் 700 லிட்டர் தண்ணீரும் பெரிய மாளிகையில் [Villa] வசிக்கும் வெளிநாட்டினர் தினமும் 5000 லிட்டர் தண்ணீரும் பச்சை பிரிவில் செலவழிக்க இயலும். அதனை விட அதிகமாக செலவு செய்தால் அதிகப்படியான லிட்டருக்கு அதிக பணம் சிகப்பு பிரிவு அடிப்படையில் செலுத்த வேண்டும். 1000 லிட்டருக்கு 5.95 திர்ஹம் வசூல் செய்யப்பட உள்ளது.

இதே போன்று அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்போர் 20 KWh அதிகமாகவும் பெரிய மாளிகையில் வசிப்போர் 200 KWh அதிகமாகவும் மின்சாரம் பயன்படுத்தினால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். மின்சார கட்டணம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous
Next Post »