சான்றிதழ்கள் சரிபார்க்க புதிய நிறுவனம் நியமனம்


சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அந்நாட்டு தூதரகம் வேலைக்கு செல்லும் நபரின் கல்வி தகுதியை சரிபார்த்து அவர்களின் சான்றிதழ்களில் முத்திரை இட்டு வழங்குவர். அதன் பிறகே அந்த நபரின் விசா அவரது பாஸ்போர்ட்டில் முத்திரை இடப்படும்.

கடந்த சில மாதங்களில் மட்டுமே சுமார் 150 க்கும் அதிகமான போலி கல்வி சான்றிதழ்களை கண்டறிந்துள்ளனர். மேலும் இத்தகைய சரிபார்த்தலுக்கு தூதரகத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் சான்றொப்பம் கிடைத்து வருவதற்கு அதிகமான நேரம் ஆவதாக பலரும் புகார் அளிப்பதை கேட்க முடிகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் இந்த தூதரகம் இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களை அணுகி சான்றிதழ்களை சரி பார்த்து தர வேண்டுகோள் விடுத்தால் அதற்கு அவர்கள் சரி வர பதில் வழங்காமல் இருப்பதே ஆகும்.

எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு சவுதி தூதரகம் ஒரு சிறப்பு நிறுவனத்தை நியமிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தூதரகத்தின் சார்பாக பல்கலை கழகங்களை அணுகி சான்றிதழ்களை சரிபார்த்து அதன் அறிக்கையை தூதரகத்திற்கு வழங்கும்.

போலி கல்வி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டால் அதனை சமர்பித்த அந்த நபருக்கு இரு வருட சிறை தண்டனை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Previous
Next Post »