சவுதி தொழிலாளர் சட்ட திருத்தங்கள்


வேலைக்கு புதிதாக சேரும் தொழிலாளர்களுக்கு ஈத் விடுமுறைகளும் மருத்துவ விடுப்புகளும் பயிற்சி காலத்தில் அளிக்க வேண்டும் என சவுதி தொழிலாளர் அமைச்சகம் புதிய திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது. இக்காலத்தில் பணியிலிருந்து நீங்க தொழிலாளருக்கும் பணியிலிருந்து நீக்க முதலாளிக்கும் உரிமை உண்டு.

தொழிலாளர் வேலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட முறையில் சம்பளம் சரியாக பட்டுவாடா செய்ய வேண்டும். அதில்  மாற்றம் செய்ய இயலாது. மேலும் வேலைக்கு சேர்த்த பின்பு தொழிலாளர்களை ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வேலையில் அமர்த்த முடியாது. அவ்வாறு செய்ய தொழிலாளரின் ஒப்புதல் முதலில் பெற்று இருக்க வேண்டும்.

தொழிலாளர் வேலையிலிருந்து நீங்கி செல்லும் போது அவருக்கு அனுபவ சான்றிதழை அவர் வேலை செய்த நிறுவனம் வழங்க வேண்டும். தொழிலாளர்களின் வேலையில் குறை ஏற்பட்டு அதனால் அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடினால் அதிக பட்சமாக 5 நாட்களுக்கான சம்பளத்தையோ அல்லது 5 நாட்கள் பணி நீக்கமோ செய்து கொள்ள அந்நிறுவனத்திற்கு உரிமை உண்டு. அதே சமயம், அத்தொழிலாளர் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பை தொழிலாளர் குறை தீர்க்கும் குழுவிடம் சமர்பித்து அதற்கான பதிலை ஒரு மாதத்திற்குள் பெற்று கொள்ள  இயலும்.

Previous
Next Post »