பஹ்ரைன் தேசிய தினம்


அரபுலகில் இஸ்லாமிய நாடாக பஹ்ரைன் ஸ்தாபிக்கப்பட்ட நாளாக அந்த நாட்டின் தேசிய தினம் டிசம்பர் 16 மற்றும் 17 ம் தேதிகளில் கொண்டாடப்படுகின்றன. அஹ்மத் அல் பதெஹ் அவர்களால் இந்நாடு 1783 ஆண்டு நிறுவப்பட்டு மன்னராட்சியின் கீழ் இயங்கி வருகிறது. 

மேலும் இத்தினம் ஐ நா வில் முழு உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்ட நாளாகவும் மாட்சிமை மிக்க மன்னர் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா சிம்மாசனத்தில் அமர்ந்த நாளாகவும்  கொண்டாடப் படுகிறது.

பஹ்ரைன் தேசிய தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்கள் பஹ்ரைன் மன்னருக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பி உள்ளார்.


Previous
Next Post »