வளைகுடா நாடுகளில் சிறிய பணியிலிருந்து பெரிய பதவிகளில் உள்ள பணிகள் வரை இந்திய நாட்டை சார்ந்த சுமார் 50 லட்சத்திற்கும் மேலானோர் வேலை செய்து வருகின்றனர்.
கட்டுமான பணிகள், எண்ணெய் கிணறு பணிகள், நகராட்சி துப்புரவு பணிகள் என எல்லா வித பணிகளிலும் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள நமது இந்திய அரசாங்கம், அத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பள நிர்ணயத்தை நிலவி வரும் விலைவாசி உயர்வு, இந்திய பண மதிப்பு மற்றும் வேலை செய்யும் நாடுகளில் உள்ள வாழ்வாதார செலவினங்களின் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்கின்றது.
கடந்த சில மாதங்களில் அந்த நிர்ணய அளவில் இந்திய அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது. சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளத்தை 670 ரியாலில் இருந்து 1200 ரியாலாகா மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது. இதே போல் அமீரகத்தில் 1200 திர்ஹமிலிருந்து 1500 திர்ஹமாக மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது.
இருந்த போதிலும் இதனை பரிசீலனை செய்து முடிவு செய்வது அந்தந்த நாட்டின் தனிப்பட்ட தீர்மானம். எனவே இதனை முழுமையாக ஏற்று கொள்ள வேண்டும் என்ற காட்டாயம் அவர்களுக்கு இல்லை.
இந்த குறைந்தபட்ச சம்பளத்தை அரசு கட்டாயப்படுத்தும் எனில், வளைகுடா நாடுகள் இந்தியர்களுக்கு கொடுக்கும் வேலை வாய்ப்புகளை குறைத்து கொள்ள கூடும்.
Sign up here with your email
