அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு பணத்திற்கான சேவை வரி மிகுந்த குழப்பத்தையும் பதட்டத்தையும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.
கலால் மற்றும் சுங்க வரி ஆணையம் கடந்த மாதம் அந்நிய செலவாணி புழங்கும் வங்கிகள் அல்லது அச்சேவை வழங்கும் நிறுவனங்கள் அதற்கான சேவை வரியை செலுத்த வேண்டும் என அறிவிப்பு செய்தது.
விதிக்கப்பட்டுள்ள சேவை வரியானது அனுப்பக்கூடிய பணத்திற்கு அல்ல, அதனை அனுப்ப உதவும் வங்கிகள் அல்லது பணம் பட்டுவாடா செய்யும் நிறுவனங்கள் வசூலிக்கும் பட்டுவாடா தொகைக்கு மட்டுமே பொருந்தும் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
உதாரணமாக ஒருவர் துபையிலிருந்து பணம் இந்தியாவிற்கு அனுப்புகிறார். அவர் அனுப்பும் பணத்தை இந்தியாவில் பட்டுவாடா செய்ய அவர் பயன்படுத்தும் வங்கியோ அல்லது நிறுவனமோ சுமார் 15 திர்ஹம் பட்டுவாடா தொகை வசூல் செய்கின்றனர். அந்த 15 திர்ஹம் மதிப்பிற்கான 12.36% சேவை வரியை அந்த வங்கியோ அல்லது அந்நிறுவனமோ அரசுக்கு செலுத்த வேண்டும். அனுப்பும் நபருக்கு எவ்வித வரியும் விதிக்கப்பட மாட்டாது.
இருந்தாலும் இது வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வசூலிக்கும் பட்டுவாடா தொகை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்பதால் இதற்க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
Sign up here with your email
