வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் படி கவுன்சிலில் உள்ள ஆறு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டினர் வேறு எந்த நாட்டிற்கும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த கவுன்சிலில் பஹ்ரைன், குவைத், ஓமன், யுஏஇ, கத்தார் மற்றும் சவூதி அரேபியா நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இச்சட்டம் போதை பொருட்கள் கடத்தல்காரர்கள், சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவர்களை கட்டுபடுத்த அமல் செய்யப்படுகிறது.
போதை பொருள் வழக்கு தவிர மற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் அனுமதி விசாரணையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up here with your email