அமீரக அறிவியல் கண்காட்சி


வளைகுடா நாடுகளிலேயே நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் கண்காட்சி 13 நவம்பர் 2014 முதல் அபூதாபியில் தொடங்குகிறது. இவ்வாண்டு இக்கண்காட்சி ஷார்ஜா மற்றும் அல் அய்ன் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. 

நிலவிற்கு பயணம் செய்யும் முறை, விஞ்ஞானிகளின் வேலை முறைகள், விண்வெளி அறிவியல், லேசர் தொழில்நுட்பம் மற்றும் பல செய்முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

;மாணவர்கள் நேரடியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

கண்காட்சி நடைபெறும் இடங்கள் 

அபூதாபி கார்னிச் [கிழக்கு பிளாசா]
அல் அய்ன் ஜூ 
ஷார்ஜா அல் மஜாஜ் வாட்டர் ப்ரண்ட் 

வார நாட்களில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வெள்ளி கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும்.

4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசம். மற்றவர்களுக்கு AED 10 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும். இக்கண்காட்சி 22 நவம்பர் 2014 முடிய நடைபெறும். 

Previous
Next Post »