வீண் பேச்சு பேசினால் அபராதம்


அலுவலகங்களில் நடந்து கொள்ளும் முறை குறித்து சவூதி அரேபியாவின் தேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

இதன் படி அலுவலக நேரங்களில் வீண் பேச்சில் ஈடுபடுவது, சொந்த காரியங்களுக்காக தனிப்பட்ட அழைப்புகளை தொலைபேசியில் செய்வது, அலுவலுக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களை படிப்பது மற்றும் நேரம் தவறி அலுவலகம் வருவது போன்றவை ஊழல் சம்பந்தமான குற்றமாக அறிவித்து உள்ளது. 

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் பிடிபடும் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அரசு சார்ந்த நிறுவனங்களில் அமல்படுத்த பட்டுள்ளது. மேலும் தகுதி உள்ளவர்கள் சேர வேண்டிய பணியிடத்தில் செல்வாக்கை பயன்படுத்தி உறவினர்களை சேர்ப்பதும் தவறு என சுட்டி காட்டியுள்ளது.

Previous
Next Post »