மருத்துவ பரிசோதனையில் தகுதி இழந்தால் அபராதம்


வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனையில் தகுதி இழந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் நாட்டு சுகாதார அமைச்சகத்தின் துணை செயலாளர் டாக்டர் காலித் அல் சஹ்லவி தெரிவித்து உள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக இந்திய நாட்டிலிருந்து வேலைக்கு வருபவர்கள் தங்கள் நாட்டில் மருத்துவ பரிசோதனை முடித்த பின்பே குவைத் வருகிறார்கள். அவர்களுக்கு குவைத் நாட்டில் செய்யப்படும் சோதனையில் அவர்களுக்கு தொற்று நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சுமார் 500 குவைத் தினார் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் அவர்களுக்கு பரிசோதனை செய்து தகுதி உள்ளதாக அறிக்கை வழங்கிய மருத்துவ மையத்திற்கு அவர்களை திரும்ப நாடு அனுப்ப ஆகும் விமான செலவுக்கான தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். 
Previous
Next Post »