அமீரக வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் சயீத் அல் நஹ்யான் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகின்ற 10 நவம்பர் 2014 அன்று விஜயம் செய்கிறார். இது அவரின் முதல் அலுவலக நிமித்தமான வருகை ஆகும்.
நவம்பர் 10 முதல் 12 ம் தேதி முடிய உள்ள இவ்வருக்கையில் வர்த்தக ரீதியான ஒத்துழைப்பு குறித்தும் இருதரப்பு நாட்டு பரஸ்பர விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் அமீரக வாழ் இந்தியர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up here with your email
