இந்திய சமூக மற்றும் கலாசார மைய விழா


இந்திய சமூக மற்றும் கலாசார மையம் சார்பாக அமீரக தேசிய நாளை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் இவ்வாண்டிற்கான இந்திய விழா வருகின்ற 4 டிசம்பர் 2014 அன்று அபூதாபியில் நடைபெற உள்ளது. 

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்திய கலாச்சாரம், வணிகம் மற்றும் சமையல் கலையை ஊக்குவிக்கும் வகையில் அமையும். இவ்விழா ஒரு சிறிய Global Village போன்று அமையும் என கலாச்சார மையத்தின் தலைவர் நடராஜன் கூறி உள்ளார்.

இவ்விழாவில் இந்திய தூதரக ஒத்துழைப்புடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் வணிகர்கள் மற்றும் உணவு வகைகளை அறிமுகம் செய்ய கடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் சுமார் 40000 க்கு மேலான இந்தியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது. 
Previous
Next Post »