குவைத் நாட்டில் நடைபெற்ற வளைகுடா மற்றும் ஆசியா நாட்டு தொழிலாளர்கள் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இத்திட்டத்தின் படி, ஆட்கள் தேர்ந்தெடுப்பதில் உள்ள முறைகேடுகளை தடுப்பது, தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது, ஆட்கள் தேர்ந்தெடுப்பில் தனியார் முகவர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்றவை முக்கியத்துவம் பெறும்.
மேலும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணவும், தொழிலாளர்களின் ஊதியம் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் திறமைகளின் வளர்ச்சி மற்றும் சோதனை செயல்முறைக்கும் வழி வகை காண ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
Sign up here with your email
