யுஏஇ தேசிய தின நிகழ்ச்சி


துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43வது தேசிய தினம் 02.12.2014 அன்று ஸாபில் பூங்காவில் [Zabeel Park] ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்து உள்ளார்.

பெரியவர்களுக்கும், சிறுவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பூங்காவில் நிகழ்ச்சி துவங்குமுன்  தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சிக்கு கட்டாயமாக முன் அனுமதி சீட்டு வாங்க வேண்டும். அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கபடுவர். முன் அனுமதி சீட்டுகளை பெற இமான் முகவர்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous
Next Post »