குடியிருப்பு அனுமதி காலம் அதிகரிக்க திட்டம்


சவூதி அரேபியா அரசாங்கம் அங்கு வாழும் வெளி நாட்டினருக்கான குடியிருப்பு அனுமதியை [Iqama] ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடங்களாக மாற்றுவதற்கு ஆலோசனை செய்து வருகிறது.

இத்திட்டம் நடைமுறை படுத்தப்படும் எனில் மிகச் சிறப்பாக அமையும் என அங்கு வாழ்ந்து வரும் வெளிநாட்டினரும், வியாபார மக்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இத்திட்டத்தின் மூலம் வெளி நாட்டினர் வேலைக்கு தக்க பாதுகாப்புக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதற்கும் ஏதுவாக அமையும்.

மேலும் வெளிநாட்டினரின் குழந்தைகளின் கல்விக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்கு இது உதவும். 

வெளிநாட்டினர் சவூதி அரேபியாவில் அதிக அளவில் முதலீடு செய்வதற்கு இத்திட்டம் ஊக்கப்படுத்தும். 

இத்திட்டம் அமுல் படுத்தப்படும் நேரம் தெளிவாக இல்லாத போதும் இது விரைவில் உள்நாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous
Next Post »