சட்ட விரோதமான முறையில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் சிறை தண்டனை இல்லாமல் ஊர் திரும்ப ஒரு அறிவிப்பை எல்லா நாட்டு தூதரகங்களுக்கும் சவூதி அரேபியா அரசு அனுப்பி உள்ளது.
உம்ரா, ஹஜ் மற்றும் வருகை விசாவில் சவூதி வந்து அங்கிருந்து வெளியேறாமல் பலர் உள்ளனர். மேலும் வீட்டு வேலைக்கு வந்து அல்லது நிறுவன வேலைக்கு வந்து, அவ்வேலை பிடிக்காமல் சொல்லாமல் அவர்கள் இடத்திலிருந்து மாறி சட்ட விரோதமாக வேறு இடங்களில் பலர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தலைமறைவாகி விட்டதாக அவர்களை வேலைக்கு எடுத்தவர்கள் அரசிடம் பதிவு செய்வர்.
சட்ட விரோதமான முறையில் தங்கி இருக்கும் வெளி நாட்டினர் பிடிபடும் போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். தற்பொழுது வந்துள்ள அறிவிப்பின் படி, பிடிபடுபவர்களின் மீது எவ்வித குற்ற வழக்கோ, அபராதமோ இல்லாத பட்சத்தில் அவர்கள் 72 மணி நேரத்திற்குள் நாட்டிலிருந்து எவ்வித சிறை தண்டனையும் இல்லாமல் வெளியேற்றப்படுவர்.
இத்தகைய நபர்கள் தங்களை வேலைக்கு அழைத்தவரிடமோ அல்லது காவல் நிலையத்திற்கோ சென்று முறையிட்டால் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up here with your email
