ஷார்ஜா பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் தங்கள் வீட்டின் வெளி பகுதியில் துணிகளை காயப் போட வேண்டாம் என ஷார்ஜா நகராட்சி கேட்டு கொண்டுள்ளது.
அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசித்து வரும் மக்கள் தங்களின் துவைத்த துணிமணிகளை காயப் போடவும், வீட்டில் உள்ள பயனற்ற சாமான்களை ஒதுக்கி வைக்கவும், தொலைக்காட்சி டிஷ் போன்றவை வைக்க தங்கள் வீட்டின் முன்னுள்ள வெளி பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர், இது ஷார்ஜா நகரத்தின் அழகாய் கெடுக்கும் வகையில் உள்ளது என்றும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் நகராட்சி கேட்டு கொண்டுள்ளது.
இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த அநேக அடுக்கு மாடி கட்டடத்தின் வரவேற்பு பகுதிகளில் நகராட்சி இது குறித்த சுவரொட்டி வைத்துள்ளது. இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு சுமார் 300 முதல் 2000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனங்களை பயன்படுத்தும் படியும் கேட்டு கொண்டுள்ளது.
Sign up here with your email
