சவுதி அரேபியாவில் பணி செய்து வரும் வெளிநாட்டு வாழ் பணியாளர்கள் தங்களை சார்ந்துள்ள பெண்கள் மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் கை ரேகைகளை பதிவு செய்யும் படி அங்குள்ள பாஸ்போர்ட் இலாகா தற்பொழுது கட்டாயப்படுத்தி உள்ளது.
கை ரேகைகளை பதிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தலைமை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கை ரேகைகள் பதிவு செய்யப்படும்.
இது வருகின்ற நவம்பர் 23 முதல் செயல்படுத்தப்படும். பாஸ்போர்ட் அலுவலக சேவைகளை பெற கை ரேகை கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும்.
Sign up here with your email
