அமீரகத்தில் இருந்து செயல்பட்டு வரும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தற்பொழுது விமானத்தில் எடுத்து செல்லும் பயண உடைமைகள் குறித்த புதிய விதிகளை அறிவித்து உள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, எடுத்து செல்லும் பயண உடைமைகளின் எல்லா பக்கங்களின் [நீளம் + அகலம் + உயரம்] மொத்த அளவு 300 செண்டி மீட்டர் அளவுக்குள் இருக்க வேண்டும். அந்த அளவை விட அதிகமாக இருக்கும் உடமைகளை இனி விமானத்தில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படாது. அந்த உடமைகளை விமான சரக்கு [Cargo] சேவை மூலமே எடுத்து செல்ல இயலும்.
பயணிகள் இலவசமாக உடமைகளை எடுத்து செல்லும் அளவு 30 கிலோ சிக்கன வகுப்பிற்கும், 40 கிலோ வணிக வகுப்பிற்கும் மற்றும் 50 கிலோ முதல் வகுப்பிற்கும் பொருந்தும்.
இந்த புதிய விதிமுறை நவம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.
Sign up here with your email
