கத்தார் நாட்டில் தொழிலாளர்கள் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர போவதாக அந்நாட்டு தொழிலாளர்கள் அமைச்சர் கூறி உள்ளார்.
தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பட்டுவாடா செய்வதற்கும் அவர்கள் ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு எளிதாக மாறுவதற்கான வழிமுறைகளை எளிமை படுத்துவதற்கும் இச்சட்ட திருத்தத்தில் வழி வகை செய்யப்படும்.
இது குறித்து ஆலோசனை வருகின்ற கூட்ட தொடரில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறி உள்ளார். மேலும் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இவ்வருட இறுதிக்குள் இது செயல் படுத்தப்படும் எனவும் கூறி உள்ளார்.
Sign up here with your email
