குடியேறிய தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான ஒப்பந்தம்


கல்வி, அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான கத்தார் அறக்கட்டளையுடன் தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகார அமைச்சகம் குடியேறிய தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் படி, இரு அமைப்புகளும் குடியிருப்பு சட்டங்களை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் நலன்களை நிறுவனங்களும் கத்தார் நாட்டு குடி மக்களும் நல்ல முறையில் பேணவும் கூட்டாக வேலை செய்யும்.

இந்த ஒப்பந்தம் தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகார அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் ஷாலேஹ் முபாரக் அல் குலைஹ்பி முன்னிலையில் கையொப்பம் செய்யப்பட்டது.
Previous
Next Post »