துபாய் ஸ்மார்ட் அரசாங்கம்


ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அரசு தனது சேவைகளை திறம்பட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்த பல்வேறு புதிய பயன்பாட்டு செயலிகளை [Apps] நமது நுண்ணறிபேசி [Smart Phone] யில் பயன் படுத்த வடிவமைத்துள்ளது. இவற்றை Google Play store அல்லது Apple App Store ல் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.

mPay
இந்த app மூலமாக துபாய் போலீஸ், RTA, எடிசலாத், DEWA போன்ற அரசு  செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த இயலும்.

DHA
இந்த app மூலமாக துபாய் சுகாதார மையம் வழங்கும் பல்வேறு சுகாதார சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

Sehhaty
இந்த app மூலமாக துபாயில் வாழும் நபர்களின் மருத்துவ விபரங்களை அவர்களின் சுகாதார அட்டை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

Dubai Doctors
இந்த app மூலமாக துபாயில் பணி செய்து வரும் பல்வேறு மருத்துவர்களின் முழு விபரங்களை அறிய முடியும்.

Dubai Police
இந்த app மூலமாக துபாய் போலீஸ் விதித்துள்ள அபராதம் விபரங்களையும் போக்குவரத்து விபரங்களையும் அறிய முடியும். அவசர அழைப்புக்கான வசதியும் அமைந்துள்ளது.

KHDA
இந்த app மூலமாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சேவைகளை தெரிந்து கொள்ள முடியும்.

DEWA
இந்த app மூலமாக துபாய் மின் மற்றும் நீர் சேவை வழங்கும் DEWA நிறுவனத்தின் அனைத்து சேவைகளை பெற முடியும்.

RTA Dubai
இந்த app மூலமாக சாலை மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை பெற முடியும்.

Wojhati Journey Planner
இந்த app மூலமாக பயனாளி அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தம், பேருந்து, மெட்ரோ ரயில் வரும் நேரங்கள் போன்றவற்றை அறிய முடியும்.

RTA Smart Parking
இந்த app மூலமாக வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கான கட்டணத்தை செலுத்த இயலும்.

iDubai
இந்த app மூலமாக துபாய் நகராட்சி வழங்கும் பொது மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை பெற முடியும்.

Dubai Calendar
இந்த app மூலமாக துபாயில் நடைபெற உள்ள அனைத்து நிகழ்ச்சிகளின் விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
Previous
Next Post »