வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் தங்களின் பாஸ்போர்ட்டை தங்களுடன் வைத்து கொள்ள முழு உரிமை இருப்பதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
தொழிலாளர்களின் விருப்பமின்றி அவர்களின் பாஸ்போர்ட்டை வைத்து கொள்ளும் நிறுவனங்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
பாஸ்போர்ட்டை வைத்து கொள்வதால் தொழிலாளி வெளியே செல்ல மாட்டார் என எண்ணுவது தவறு என்றும் பல தொழிலாளர்கள் ஏற்கனவே வெளியே சென்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும் கூறியுள்ளது.
ஏதேனும் ஒரு தொழிலாளி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் பணிக்கு வரவில்லை என்றால் அவருக்கு பதிலாக இன்னொருவரை முறையாக பணி நியமனம் செய்யலாம் என அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் மீது தொழிலாளர்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அதே போன்று தலை மறைவாகும் தொழிலாளர்கள் குறித்து உடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் அந்நிறுவனம் புகார் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
Sign up here with your email
