வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதற்கு இந்திய நாட்டில் அதிகமான ஆட்சேர்ப்பு முகவர்கள் உள்ளனர். இவர்களில் பல முகவர்கள் அதிக ஆண்டுகளாக நல்ல முறையில் வேலை வாய்ப்பை பலருக்கு பெற்று கொடுத்துள்ளனர்.
சில சமயங்களில் வேலை தேடுவோர் சில முகவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதிலிருந்து தற்காத்து கொள்ள என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசிடம் முகவர் தனது நிறுவனத்தை பதிவு செய்துள்ளாரா, அந்த பதிவு சான்றிதழ் காலாவதி ஆகாமல் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் துணை முகவர்களிடம் வேலை வாய்ப்பை பெற செல்ல கூடாது.
வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்துடன் அந்த முகவர் செய்து கொண்ட செயலுரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும்
சேவை கட்டணம் தவிர வேறு எந்த தொகையும் முகவருக்கு கொடுக்க கூடாது. ஒப்புக்க்கொள்ளப்பட்ட சம்பளத்தின் 45 நாட்கள் தொகையோ அல்லது அதிக பட்சமாக ரூபாய் இருபது ஆயிரம் மட்டுமே சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணத்தை DD அல்லது காசோலை ஆக கொடுக்க வேண்டும். செலுத்தும் தொகைக்கு ரசீது பெற்று கொள்ள வேண்டும். அதிகம் பணம் கேட்டாலோ அல்லது மோசடி செய்தாலோ Protector of Emigrants அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்
Sign up here with your email
