இந்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்களால் வழங்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆண்டு 2015-2106 க்கான நிதி நிலை பட்ஜெட் அறிக்கை நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் திரு அருண் ஜெட்லி அவர்களால் வழங்கப்பட்டது. அதில் சேவை வரி 2 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சேவை வரி 12.36% லிருந்து 14% ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அவர்கள் பயணம் செய்ய புக் செய்யும் விமான டிக்கெட் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. மேலும் விமான சேவை நிறுவனங்கள் இதன் காரணமாக வழங்கி வரும் சலுகைகளை குறைத்து கொள்ள வாய்ப்புள்ளது.
மேலும் இந்த சேவை வரி இந்தியாவில் புக் செய்யப்படும் டிக்கெட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் விமானத்தில் பெறப்படும் மற்ற சேவைகளுக்கான சேவை வரியினை செலுத்தியே ஆக வேண்டும்.
Sign up here with your email
